அடுப்பு இல்லாமல் 5 நிமிடங்கள் 13 வினாடிகளில்100 பேர் 100 விதமான இயற்கை உணவுகளை சமைத்து அசத்தினர்,நடந்து நிகழ்வு பார்ப்போம்.!

தமிழகத்தில் ராஜபாளையம் என்ற ஊரில் தொழில் வர்த்தக சங்கத்தில் இந்த போட்டி நடைபெற்றுள்ளது,அதாவது ஆரோக்கியமான இயற்கை உணவுகள் மற்றும் பாரம்பரிய உணவுப் பழக்க வழக்கங்களை இளைய தலைமுறைக்குக் கொண்டு செல்லும் வகையில் உணவுத் திருவிழா நேற்று நடைபெற்றது.

இந்த திருவிழாவில் பல மாவட்டத்தில் இருந்து 100 சமையல் கலைஞர்கள் கலந்து கொண்டு வந்துள்ள நிலையில், நடுவர்கள் மத்தியில் அடுப்பில்லா முறையில் உணவு சமைத்து சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.

5 நிமிடங்கள் 13 வினாடிகளில் 100 பேர் தனித்தனியாக 100 விதமான இயற்கை உணவுகளை சமைத்து அசத்தினர், உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற சான்றிதழ்களை வழங்கி மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *