ஜனனி
பிக் பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளராக இலங்கை சார்பாக பங்கேற்றவர் தான் ஜனனி இவர் இலங்கையில் இருக்கும் ஒரு பிரபல தொலைக்காட்சியில் மூலம் தான் மீடியாத்துறைக்கு அறிமுகமானார்,இவரின் குழந்தைத்தனமாக ரியாக்ஷன் தான் இவர் ரீல்ஸில் பிரபல்யமடையவும் பிக் பாஸ் சீசன் 6 ற்கு செல்லவும் உதவியாக இருந்தது பிக் பாஸ் சென்று தன்னுடைய பிறப்பு தமிழை மறக்காது.
அங்கிருந்த சக போட்டியாளர்களுடன் அதே இலங்கை தமிழில் தான் பேசி விளையாடி வந்தார் அதிலும் விக்ரமன் தன்னுடைய தமிழை ஏளனம் செய்கிறார் என்று சண்டைகளும் சென்றது,ஒரு கட்டத்தில் ஜனனியால் எழும்ப முடியாத அளவு டாஸ்க்கள் மிகவும் கடுமையாக்கப்பட்டதாலும் அமுதவாணனுடன் குழு முறையில் செயற்பட்டமையாலும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஜனனி சொந்த ஊருக்கு செல்ல முடியாத அளவிற்கு வாய்ப்புகள் வந்து குவிந்ததாக பிக் பாஸ் ப்னல் ஷோவில் கமல் முன்னாள் ஒப்புக் கொண்டார்.
இதனை தொடர்ந்து இவர் விஜயின் 67 திரைப்படத்தில் விஜயிற்கு தங்கையாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகிய நிலையில் இந்த செய்தி அதிகாரப்பூர்வமாக உறுதிச் செய்யப்பட்டுள்ளது,இவர் மட்டுமன்றி இவர் போன்று சமூக வலைத்தளங்களிலிருந்து சினிமாப்பக்கம் வர வேண்டும் என்ற எண்ணத்தில் ரீல்ஸ்களில் பிரபல்யமான இளைஞர்களும் நடிக்கவிருக்கிறார்களாம்.
இந்நிலையில் ஜனனி கருப்பு நிற சேலை அணிந்து விஜயின் வாரிசு திரைப்படத்தில் வெளியான ..ஜிமிக்கி ஜிமிக்கி பொண்ணு.. என்ற பாடலுக்கு நிலவு போல் ரியாக்ஷன் கொடுத்துள்ளதுடன் ஜொலித்துள்ளார்,இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது..
— Janany ❁ (@imjananykj) February 2, 2023
Leave a Reply