பள்ளிக்கு செல்லும் சிறுவன் ஒருவன் தனது தம்பியால் நடக்க முடியவில்லை என்பதால் அவனை தூக்கிக் கொண்டு செல்லும் காட்சி டுவிட்டரில் வைரலாகி வருகின்றது பொதுவாக உடன்பிறப்புகளின் பாசம் என்பது அதனை வார்த்தையால் கூறி விடமுடியாது அந்த அளவிற்கு உணர்வுப் பூர்வமான பாசம் நிறைந்த ஒரு உறவாகும்.
இங்கு காணொளியில் சிறுவன் ஒருவன் பள்ளிக்கு செல்கின்றான் உடன் சிறுவயது அவன் தம்பியும் செல்லும் நிலையில் தம்பியால் நடக்கமுடியவில்லை என்பதால், தனது புத்தகப் பையையும் தம்பியையும் கஷ்டப்பட்டு தூக்கிக்கொண்டு பள்ளிக்கு செல்கின்றான் இதனை அந்த சாலையில் வழியாக சைக்கிளில் சென்ற வாலிபர் ஒருவர் காணொளியாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
உடன்பிறப்பே😍❣️ pic.twitter.com/qhlfDWEpAO
— செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்.. (@selvachidambara) February 12, 2023