அந்தக் கால மாட்டு வண்டி மாடல் ரூ.11 லட்சம் என்றால் நம்ப முடிகிறதா..ஊர் மக்கள் அனைவரையும் வாய் பிளக்க வைத்த மாட்டு வண்டி..!

ஆனால் மாட்டு வண்டில பயணம் செய்யவேண்டும் என்று நினைத்த ஒருவர், ரூ.11 லட்சம் செலவு செய்துள்ளார்,திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கண்ணமங்கலம் ஒண்ணுபுரம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மார்கபந்து,இவர், நாகரீக காலத்திலும் பழமையையே விரும்பும் பண்பாளராகத் திகழ்கிறார்.

பழமை, பாரம்பரியத்தை காப்பதற்காக ரூ.8 லட்சத்தில் தேக்கு மரத்தினால் செய்யப்பட்ட மாட்டு வண்டியை வாங்கினார் இந்த வண்டிக்காக ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் 2 காங்கேயம் காளைகளை வாங்கி பூட்டினார்.

இப்போது, இந்த விலை உயர்ந்த மாட்டுவண்டியில் மார்கபந்து சொகுசு பயணம் செய்து வருகிறார்,அவரது ஆசைக்கு ரூ.11 லட்சம் ஆனாலும், அவரைப் பார்த்து ஆச்சரியப் படாதவர்கள் இல்லை.


Posted

in

by

Tags: