நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று இரவு நடைபெற்றது,வாரிசு படத்தில் ஆடியோ வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியான நாள் முதல் நடிகர் விஜயின் பேச்சு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் உச்சகட்ட ஆவலில் இருந்து வந்தனர், அப்படி ஒரு அப்படி ஒரு சூழலில் நேரு உள்ள விளையாட்டு அரங்கில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.
விழாவில் படத்தின் இயக்குநர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு, இசையமைப்பாளர் தமன், நடிகை ராஷ்மிகா மந்தனா,எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், ஷங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், பிரகாஷ் ராஜ், சரத்குமார், நடிகர் ஷாம் மற்றும் பலர் கலந்துகொண்டுள்ளனர் இதில் கலந்து கொண்டு நடிகர் விஜய் மேடையில் ரஞ்சிதமே பாடலை பாட, அவருடன் ரசிகர்களும் கூட சேர்ந்து பாடினார்கள்.
1990 களில் எனக்கு ஒரு நடிகர் போட்டியாளரா வந்தாரு, கொஞ்ச நாள்ல அவரு எனக்கு சீரியசான போட்டியாளரா ஆனாரு, அவரோட வெற்றியால நானும் வேகமா ஓட வேண்டியிருந்தது, அவரை விட அதிகமா ஜெயிக்கணும்னு நினைச்சேன்.
எல்லாருக்கும் அப்படி ஒரு போட்டியாளர் தேவை,அந்த போட்டியாளர் பேரு ஜோசப் விஜய்,உங்க கூட நீங்க போட்டி போடுங்க, தேவையான விமர்சனமும் தேவையற்ற எதிர்ப்பும்தான் நம்மல ஓட வைக்கும், வாழ்க்கைல முன்னேறனும்னா உங்களுக்கு ஒரு போட்டியாளர் இருக்கணும், ஆனா, அந்த போட்டியாளர் நீங்களாதான் இருக்கணும்,விஜய் தெரிவித்தார்.
வீடியோ கீழே உள்ளது பாருங்கள்
#EnNenjilKudiyirukkum pic.twitter.com/4rbooR4XLa
— Vijay (@actorvijay) December 24, 2022
Leave a Reply