அமெரிக்காவையே அசத்தும் தமிழனின் தோசை கடை.. பாண்டிச்சேரி தோசை வாயை பிளக்கும் அமெரிக்கா மக்கள்..தோசை மேன்..!

தோசை மேன் நியூயோர்க்கில் தமிழரின் தோசைக்கடை அந்நாட்டு மக்களிடம் அமோக வரவேற்பு நியூயோர்க் என்றால் இரட்டைக் கோபுரங்கள் தான் நினைவிற்கு வரும் ஆனால் அங்கு திருக்குமார் கந்தசாமியின் தோசைக்கடையும் மிகவும் பிரபல்யம் தோசா நாயகன்.

திருக்குமார் கந்தசாமியின் உணவு வண்டி, நியூயோர்க் புறநகர் மற்றும் அதை ஒட்டிய மாநிலங்களில் இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர் இவர் தெருவில் மிகச் சிறிய தோசையை கடையை வைத்து அதிகளவில் இலாபம் பார்த்துக் கொண்டிருக்கிறார் தோசை மேன் திருக்குமார்.

பல்வேறு தோசைக்கு தேவையான எல்லா பொருள்களையும், சட்னி, சாம்பார், இட்லி பொடி என அனைத்தையும் வீட்டில் இவரே தயாரித்து எடுத்துவருவதால் சுவையில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லையாம் உணவும் மிகவும் ருசியதகவும் இருக்கமாம்.

இவருக்கு எல்லா நாடுகளிலிருந்தும் பாராட்டுகள் வந்துக் கொண்டே இருக்குமாம்,அமெரிக்காவுக்கு பல்வேறு நாட்டை சேர்ந்தவர்கள் விஜயம் செய்வதால் இவரது கடை குறித்த விவரங்கள் 42 புத்தகங்களில் இடம்பெற்றுள்ளன 2007ஆம் ஆண்டில், சிறந்த தெரு உணவு விற்பனையாளருக்கான நியூயோர்க்கின் வருடாந்திரப் போட்டியான வெண்டி விருதை கந்தசாமி வென்றுள்ளார்.

20 ஆண்டுகள் நிறைவு, திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை மதியம் 12 மணி வரை பிற்பகல் 3 மணி வரை இவரது கடை திறந்திருக்கும்,உலகின் பல நாட்டு மக்களும் வசிக்கும் நியூயோர்க்கில் அமெரிக்கன், மெக்ஸிகன், ஐரோப்பியன், ஆப்கன் ஸ்ட்ரீட் ஃபுட்களுக்கு மத்தியில் நம் ஊர் தோசையையும் போட்டிபோடவைத்துள்ளார் இவரின் தோசை விலை 7 டாலர்கள் அமெரிக்காவில் பர்கர் விலை இதைவிட அதிகம்,திருக்குமாரின் கடைக்கு அதிகளவில் வெள்ளையர்களே வருவார்களாம்,இவர் நியூயோர்க்கில் தோசை கடை தொடங்கி 20ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.


Posted

in

by

Tags: