தர்மபுரி மாவட்டம், அனுமந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (35) பெயிண்டரான இவருக்கு தீபா என்ற மனைவியும், குருபிரகாஷ் (15) மனோ (14) என்ற 2 மகன்களும் இருந்தனர், அவரது மனைவி தீபா கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இ ற ந் து வி ட் டா ர், ரமேஷ் தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள அத்திமூட்லு கிராமத்தில் வசித்து வருகிறார் மகன்கள் குருபிரகாஷ், மனோ ஆகிய 2 பேரும் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முறையே 10 மற்றும் 9ம் வகுப்பு படித்து வந்தனர்.
இந்நிலையில் மாணவர்கள் அனைவரும் இரவு விடுதியில் இருந்தனர் அந்த நேரம் தான் தனியாக படிக்க போவதாக கூறி குருபிரகாஷ் விடுதியில் உள்ள ஒரு அறைக்கு சென்றார் மற்ற மாணவர்கள் விடுதியில் இருந்த மற்ற அறைகளில் தூங்கினார்கள், காலை குருபிரகாஷ் தங்கி இருந்த அறையின் கதவு உள்புறமாக தாளிடப்பட்டு இருந்தது நீண்ட நேரமாக தட்டியும் கதவு திறக்கப்படவில்லை இதனால் சந்தேகம் அடைந்த மாணவர்கள் அந்த அறையின் ஜன்னல் கதவை திறந்து பார்த்தனர்.
அப்போது அங்கு இருந்த மின்விசிறியில் படுக்கை விரிப்பால் தூ க் குப் போட்டு மாணவர் குருபிரகாஷ் த ற் கொ லை செய்திருந்தார் இதை கண்டு அதி ர் ச் சி அடைந்த சக மாணவர்கள்,ராயக்கோட்டை காவல் நிலையத்திற்கு புகார் செய்தனர் ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர் சம்பவ இடத்திற்கு ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் கனகராஜ் தேன்கனிக்கோட்டை தாசில்தார் சரவணகுமார் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினார்கள்,மாணவர் தங்கி இருந்த அறையில் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார் அதை போலீசார் கைப்பற்றினார்கள் மாணவர் த ற் கொ லை தொடர்பாக ராயக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.