அற்புதமான சாமி தரிசனம்.. ஸ்ரீரங்க ரங்கநாதன் சாமிக்கு தீபாராதனை எடுக்கும் அற்புதமான காட்சி,மனதில் உள்ள குறையை தீர்த்து வைப்பார்..!

ஸ்ரீ ரங்கம் ரங்கநாத சுவாமி

ஆன்மிகம் இன்று மனித வாழ்வின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று எந்த மனிதனாக இருந்தாலும் ஆன்மிகச் சிந்தனையே அவனை அடுத்த அடுத்த பரிணாமத்திற்கு வளர்க்கிறது பொதுவாகவே கடவுள்களின் விக்கிரகங்களை பார்த்து தரிசிக்கும் போது நமக்குள் ஒரு நிம்மதி பிறக்கும் ஒன்று ஒவ்வொரு வீட்டிலும்தான் பூஜையறை உள்ளது பின்பு ஏன் ஆலயத்திற்கு சென்று தரிசிக்க வேண்டும் என்னும் கேள்வி எழலாம்.

பசுவின் எல்லா இடங்களிலுமே பால் இருக்கிறது இருந்தும் மடியைப் பிடித்து இழுத்தால்தானே பால் வருகிறது அதுபோல் தான் இதுவும் என்று ஆன்மிகப் பெரியவர் கிருபானந்த வாரியார் சொல்வார் அதேபோல் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமியை நேரில் போய் தரிசிக்க வேண்டும் என்னும் ஆர்வம் அனைவருக்கும் இருக்கும்.

அப்படி போக இயலாதவர்களுக்காக, ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் மிகப் பிரமாண்டமான கடவுள் விக்கிரகத்திற்கு நடக்கும் தீபாராதனைக் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக கண்முன்பே நடக்கிறது,இதோ நீங்களே இதைப் பாருங்கள்.


Posted

in

by

Tags: