ஆஸ்திரேலியாவில் சிட்னி கடற்கரையில் வித்தியாசமான உயிரினம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது அந்த கடற்கரைக்கு நபர் ஒருவர் தனது செல்ல நாயுடன் பீச்சுக்கு சென்றிருக்கிறார் வித்தியாசமான உ யி ரி ன ம் ஒ ன் று க ட லி ல் இ ரு ந் து க ரை ஒதுங்கியிருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
ஏதோவொன்று கிடப்பதை பார்த்த அவர் ஆர்வத்துடன் அதன் அருகே சென்றுள்ளார் அப்போது தான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது,இதுகுறித்த பேசிய அவர் மணலில் நீளமாக கிடந்த அந்த உயிரினத்தின் மீது பல வண்ண கலவைகளால் ஆன இறக்கைகள் போன்ற அமைப்பு இருந்தது. அவை அசைந்து கொண்டிருந்தன.
அந்த உயிரினத்தின் இன்னொரு பாதி கடலிலேயே துண்டிக்கப்பட்டு இருக்கலாம் என நினைத்தேன் மேலும், இதுபோன்ற ஒன்றை பார்த்ததில்லை யாரும் இப்படி ஒரு விநோதத்தை பார்த்திருப்பார்களா என்றும் தெரியவில்லை என்றார் அதன் பின் சில நாட்கள் கழித்து மீண்டும் அதே பகுதிக்கு விக்கி சென்றிருக்கிறார்.
அப்போது எந்த அசைவுகளும் இன்றி அந்த உயிரினம் கிடந்திருக்கிறது ஆகவே அது உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்தார்,இந்த வினோத உயிரினத்தின் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் பரவி பல்வேறு வகையான விவாதங்களை எழுப்பியுள்ளது.