மதுரை ஹெய்ஹிந்த்புரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சக்திவேல் இவர் செல்லப்பிராணிகள் மீது அளவுக்கதிகமான அன்பு கொண்டவர் இந்த சூழலில் தான் வளர்த்து வரும் சுஜி என்ற பெண் நாய் க ர் ப் ப ம் தரித்தது இதை அடுத்து தன் குடும்பத்தாருடன் இணைந்து நாய்க்கு வளைகாப்பு நடத்துவது என முடிவு செய்தார்.
அதன் அடிப்படையில் தனது செல்லப் பிராணியான சுஜிக்கு ஐந்து வகையான உணவுகளை தயார் செய்து மாலை வளையல் அணிவித்து வளைகாப்பு நடத்தி முடித்தார் இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் செல்லப்பிராணியின் மீது காவல் உதவி ஆய்வாளாராக இருந்து கொண்டிருக்கும் அன்பை கண்டு வியந்து பாராட்டி வருகின்றனர்.
காவல் உதவி ஆய்வாளர் சக்திவேல் நம்மிடம் கூறுகையில் மனிதர்களுக்கு வளைகாப்பு நடத்தப்படுகிறது அதேபோல் செல்லப் பிராணிகளான என் வீட்டில் வளர்க்கக்கூடிய சுஜிக்கும் வளைகாப்பு நடத்தியதில் நான் எல்லையில்லா இன்பம் அடைந்துள்ளேன் என்கிறார்.
காவலர்கள் என்று சொன்னாலே இரும்பு மனிதர்கள் போலவும் அரக்க குணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என நினைவுக்கு வரும் கட்டமைப்புகள் நமது நாட்டில் உள்ளது இப்படிப்பட்ட சூழலில் காவல்துறை மனிதனின் நண்பன் மட்டுமல்ல செல்லப்பிராணிகளையும் உறவாக நேசிப்பவர்கள் என்பதை இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.