ஒரு கடிதம் எழுதினேன்..31 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றாக சேர்ந்த காதல் ஜோடி..தித்திக்க வைக்கும் இங்கிலாந் காதல் கதை..!!

இங்கிலாந்தின் கிஸ்பேரோ பகுதியை சேர்ந்த பெண் Kate Pymm (50) இவர் 1989 ஆம் ஆண்டு கேட் தனக்கு 19 வயதாக இருந்தபோது டிவோன் நகரத்திற்கு சென்றிருக்கிறார் அப்போது  அவர் Guenther Baer (57) என்பவரை சந்தித்திருக்கிறார் Guenther Baer ஜெர்மனியை சேர்ந்தவர் அப்போது அவருக்கு வயது 32 முதல் சந்திப்பிலேயே இருவரும் நண்பர்களாகியுள்ளனர் இதனையடுத்து இருவரும் பரஸ்பரம் முகவரிகளை பரிமாறிக்கொண்டனர்.

நட்பாக துவங்கிய இவர்களது பயணம் காதலில் சென்று சேர்ந்திருக்கிறது கொஞ்ச நாளில் இருவரும் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி இருக்கின்றனர் ஆனாலும் கடிதம் மூலமாக இருவரும் தங்களது காதலை வளர்த்திருக்கின்றனர் இந்த சூழ்நிலையில் இந்த காதல் கைகூடாது என Kate நினைத்திருக்கிறார்,அதன்பிறகு இருவரும் கடிதம் எழுதுவதையும் நிறுத்திக்கொண்டனர் இருவருக்கும் தனித்தனியாக திருமணமாகி வாழ்ந்துவந்த நிலையில் அண்மையில் இருவருக்கும் அவரவர் மண வாழ்க்கையில் இருந்து விவாகரத்தும் நடந்திருக்கிறது.

அப்போது எதேச்சையாக Guenther எழுதிய பழைய கடிதங்களை கண்டுபிடித்திருக்கிறார் கேட் அவருக்குள் பழைய காதல் மீண்டும் பூக்கவே மிகுந்த சிரமப்பட்டு அவரது முகவரியை கண்டுபிடித்து கடிதம் எழுதியிருக்கிறார் Kate தனிமையில் வசித்துவந்த Guenther Kate-ன் கடிதத்தை கண்டதும் கண்கலங்க இருவருக்குள்ளும் மீண்டும் காதல் மலர்ந்திருக்கிறது இதனையடுத்து 2021 ஆம் ஆண்டு இருவரும் சந்தித்திருக்கின்றனர்.

இனியும் காலத்தை வீணாக்க விரும்பாததால் இருவரும் திருமணம் செய்துகொண்டனர் இந்த தம்பதியின் இந்த விஷயம் பலருக்கும் ஏற்கனவே தெரியவந்தாலும் தற்போது காதலர் தினமான பிப்ரவரி மாதத்தில் இவர்களின் காதல் கதையை பலரும் பகிர்ந்து வருகின்றனர் காதல் கைகூடாது என்ற நிலையில் 31 ஆண்டுகள் பிரிந்திருந்த ஜோடிகள் மீண்டும் சேர்ந்திருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.


Posted

in

by

Tags: