ஒரு பொண்ணு கிடைக்கிறது கஷ்டம்..இங்கே ஒரு நிகழ்வு மூன்று பெண்களை ஒரே நபர் திருமணம் செய்த செயல்..!

கென்யா பலதார மணம் (Polygamy) இன்றைய உலகில் கேள்விப்படாதது அல்ல இருப்பினும் சகோதரிகள் ஒரே ஆணுடன் திருமணம் செய்துகொள்வது மிகவும் வித்தியாசமானது,கென்யாவில் நடந்த வினோதமான தொடர் நிகழ்வுகளில், Identical Triplets என்று சொல்லக்கூடிய ஒரே பிரசவத்தில் பிறந்த ஒரே மாதிரியான மூன்று சகோதரிகள் ஒரே நபரை திருமணம் செய்த வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கேட், ஈவ் மற்றும் மேரி (Cate, Eve and Mary) எனும் சகோதரிகள் மூன்று பேரும் கிறித்துவ நற்செய்தி இசைப் பாடகிகளாக உள்ளனர் இவர்கள் கென்யாவைச் சேர்ந்த ஸ்டீவோ (Stevo) என்ற நபரை மணந்தனர் முதலில் கேட் தான் ஸ்டீவோவை சந்தித்துள்ளார் அதற்கு பிறகு வழக்கத்திற்கு மாறான இந்த உறவுக்கு வழிவகுக்கும் நிகழ்வுகள் தொடங்கியது.

ஸ்டீவோ கேட்டின் மற்ற சகோதரிகளை சந்தித்தார் சகோதரிகளுடனான தனது சந்திப்பைப் பற்றி பேசிய ஸ்டீவோ அவர்களுடனான தனது தொடர்பு தன்னை ஒரு பெண்ணுக்காக உருவாக்கப்படவில்லை என்ற உணர்வை ஏற்படுத்தியதாகக் கூறினார்விரைவில் அந்த நபர் மூன்று சகோதரிகளையும் திருமணம் செய்து கொண்டார் பிறப்பால் பலதார மணம் கொண்டவர் என்று கூறும் ஸ்டீவோ, தனது வாழ்க்கையில் மூன்று பெண்களுடன் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறினார்.

மூன்று பெண்களின் தேவைகளையும் விருப்பங்களையும் சமமாகப் பூர்த்தி செய்வது கடினமா என்று கேட்டவர்களிடம் நான் மூன்று பெண்களை திருப்திப்படுத்துவதில் மக்கள் ஏன் சந்தேகிக்கிறார்கள், அது ஒரு பெரிய விஷயமில்லை என்று ஸ்டீவோ கூறுகிறார்.

அவர் ஒரு கண்டிப்பான கால அட்டவணையைப் பின்பற்றுவதாகவும் அனைத்து பெண்களுக்கும் போதுமான நேரத்தை உறுதி செய்வதாகவும் அவர் விளக்கினார் திங்கட்கிழமைகள் மேரிக்கு என்றும், செவ்வாய்க் கிழமைகள் கேட் என்றும் புதன்கிழமை ஈவ் என்றும் கூறினார்.

இதற்கிடையில், சகோதரிகள் தங்கள் குடும்பத்தில் மேலும் சேர்க்க வசதியாக இல்லை நாங்கள் மூவரும் அவருக்குப் போதும், இன்னொருவரை அழைத்து வர அனுமதிக்கப் போவதில்லை என்று மூவரும் கூறினர்.


Posted

in

by

Tags: