ஒரே நாளில் கோடீஸ்வரர், தொழிலாளிக்கு அடித்த கோடி பரிசு..வாங்க நடந்து நிகழ்வு பார்ப்போம்..!

கேரள  ராஜன், கண்ணூர் மாவட்டம் கூத்தம்பரம்பு பகுதி ஆதிவாசி காலனியைச் சேர்ந்தவர் அவருக்கு ஒரு மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர் குடிசை வீட்டில் வசித்து வரும் ஏழைக் கூலித் தொழிலாளியான ராஜன்  பரிசு விழுந்த லாட்டரிச் சீட்டை வயநாட்டில் உள்ள ஒரு லாட்டரி வியாபாரியிடம் வாங்கியிருந்தார்.

தான் வாங்கிய லாட்டரிச் சீட்டுக்கு பரிசு விழுந்திருப்பதை அறிந்த ராஜன் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்  உடனடியாக அந்த பரிசுத் தொகையை அருகில் உள்ள வங்கியில் அவர் டெபாசிட் செய்து விட்டார்.

ராஜன் மட்டுமல்ல சமீபகாலமாக கேரளாவில் லாட்டரிச் சீட்டு மூலம் ஏழைகள் பலர் பணக்காரர்களான சம்பவம் அதிகரித்து வருகிறது கடந்தாண்டு ஆலப்புழாவைச் சேர்ந்த மீனவ இளைஞரான அந்து  ராணுவத்தில் சேர முயன்று தோல்வியடைந்த வேதனையில் இருந்தபோது அவருக்கு கேரள அரசின் ஸ்ரீசக்தி லாட்டரிச் சீட்டு மூலம் ரூ.70 லட்சம் பரிசாகக் கிடைத்தது.

அதுதான் அவரது வாழ்நாளில் வாங்கிய முதல் லாட்டரி சீட்டு ஆகும் இதேபோல், ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள செட்டிக்குளக்காரா கிராமத்தில் சிவன் என்பவருக்கு அதிர்ஷ்டம் வீடு தேடி வந்து கதவைத் தட்டியது, இதய நோயாளி என தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு லாட்டரி விற்பனை செய்தவர் ஒருவரிடம், மனைவியின் தூண்டுதலால் சிவன் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கினார்.

அதில் அவருக்கு ரூ.70 லட்சம் பரிசாக விழுந்தது கடந்தாண்டு கடலை வியாபாரி ஒருவருக்கு ரூ.60 லட்சமும், முன்னாள் பஞ்சாயத்து கவுன்சிலரான 60 வயது முதியவருக்கு 6 கோடி ரூபாயும் லாட்டரியில் பரிசாகக் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்புவர்கள் அடிக்கடி இப்படிச் சொல்லிக் கேட்டிருப்பீர்கள் ஏனெனில் ஒரே நாளில் ஓட்டாண்டியைக்கூட கோடீஸ்வரன் ஆக்குபவை லாட்டரி சீட்டுகள் மட்டுமே தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது..


Posted

in

by

Tags: