கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் பால்கி தாலுகாவை சேர்ந்தவர் அஸ்வினி 24 என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் பல ஆண்டுகளாக போலீஸ் இன்ஸ்பெக்டராக முயற்சி செய்து வருகிறார் இரண்டு முறை சொற்ப மதிப்பெண்களில் தேர்ச்சியை தவற விட்டார் அவருக்கு திருமணம் முடிந்து தற்போது அவர் இரண்டரை மாத கர்ப்பிணி இந்நிலையில் சமீபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு நடந்தது.
இதில் அஸ்வினி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார் கடந்த 11ஆம் தேதி கல்புர்கி மாவட்டம் கேஆர் பேட்டையில் உடல்தகுதி தேர்வு நடைபெற்றது எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற இவர் அந்த வாய்ப்பை தவறவிட்டால் மீண்டும் தேர்ச்சி பெற முடியாது என்று நினைத்தார் இதனால் கர்ப்பத்தையும் பொருட்படுத்தாமல் உடல் தகுதி தேர்வில் கலந்து கொள்ள முடிவு செய்தார் 400 மீட்டர் தூரத்தை 2 நிமிடத்தில் ஓடி கடக்கும் தேர்வில் பங்கேற்றார் அந்த தூரத்தை அவர் 1.36 நிமிடத்தில் கடந்து வெற்றி பெற்றார்.
இதன் மூலம் உடல் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றார் இதுவரை கர்நாடகத்தில் க.ர்ப்.பிணிகள் யாரும் இது போன்று போலீஸ் உடல் தகுதி தேர்வில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.