விமான பயணங்கள் என்றாலே சுவாரசியங்கள் நிறைந்தது தான் ஒருவேளை நடுவானில் வி மா ன ம் பறந்து கொண்டிருக்கும் போது கர்ப்பிணி பெண் திடீரென குழந்தையை பிரசுவித்தால் எந்த நாட்டு குடியுரிமை வழங்கப்படும்..
என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும் ஒரு நாட்டின் குடிமகனுக்கு அந்நாட்டில் அனைத்துவித சலுகைகளும் உண்டுஆனால் நடுவானில் பிறந்துவிட்டால் எந்த நாட்டின் பிரஜை என அழைக்கப்படுவார்கள் இது ஒவ்வொரு நாட்டுக்கும் வேறுபடுகிறது..
ஆதாவது இதை மூன்று வகையில் தீர்மானிக்கிறார்கள் பதிவு பெற்ற விமானத்தின் நாடு எந்த நாட்டின் மேலே பறக்கிறதோ அந்த நாடு அல்லது எந்த நாட்டில் தரையிறங்குகிறதோ அந்த நாடு என்ற விதிமுறையை உருவாக்கி இருக்கிறார்கள்.
பெரும்பாலும் விமானம் பதிவு செய்யப்பட்ட நாடே கணக்கிடப்படுகிறது குறிப்பாக குழந்தை பிறந்த நேரம் அப்போது விமானம் எந்த நாட்டின் மீது பறந்து கொண்டிருந்தது போன்றவற்றை ஆராய்வர்பெரும்பாலும் இக்குழந்தை பெற்றோர் எந்த நாட்டைச் சேர்ந்தவரோ அந்நாட்டின் குடியுரிமையையே பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
உதாரணத்திற்கு இந்தியாவிலுருந்து அமெரிக்கா செல்லும் விமானத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு கனடிய எல்லையில் செல்லும் போது குழந்தை பிறந்து விட்டால் அக்குழந்தை கனடா குடிமகனுக்கு விண்ணப்பிக்க முடியும் குழந்தையின் தாய் தந்தையின் நாட்டிலும் குடிமகனுக்கு விண்ணப்பிக்க முடியும்.
இதேபோன்று நோர்வே நாட்டில் பதிவு செய்யப்பட்ட விமானத்தில் இரு நாட்டு எல்லைகளுக்கு இடையே குழந்தை பிறந்தால் நோர்வே நாட்டு குடிமகனாக கருதப்படுவார் ஒரு சில நாடுகள் அக்குழந்தையை fly-by babies என்றும் கருதுகிறார்கள் NPR அறிக்கையின் படி சில நாடுகள் தங்களது எல்லையை 43 மைல் தொலைவுக்கு அப்பாலும் சில நாடுகள் 99 மைல் தொலைவுக்கு அப்பாலும் விரிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.