கல்லூரியில் சேர்ந்து படித்து விட வேண்டும் என்று ஏராளமான நம்பிக்கை கனவுகளோடு வந்தவளுக்கு ஏமாற்றமே அங்கு காத்திருந்தது காரணம் காலேஜ் அட்மிஷனுக்காக நிர்வாகம் கேட்ட தொகையை கொடுக்க அவளது பெற்றோரால் இயலவில்லை கூடவே வந்திருந்த பெற்றோர் ஏமாற்றத்துடன் நின்ற தங்கள் மகளின் கலங்கிய கண்களைப் பார்க்க திராணி இல்லாமல் வேறு எங்கோ பார்ப்பது போல ஆனால் குமுறல்களை மனதுக்குள் சுமந்து கொண்டு கூனிக்குறுகி நின்று கொண்டிருந்தார்கள்.
விரக்தியோடு வெகு நேரம் அப்படியே அங்கேயே அசையாமல் நின்றிருந்தாள் அந்தப் பெண் தன் ஏமாற்றத்தை வெளியே காட்டினால் பெற்றோர் மனம் சங்கடப்படுமே என நினைத்து பொய்யாக புன்னகைத்து தன் அ ப் பா அம்மாவிடம் சொன்னாள் சரிப்பா வாங்க வீட்டுக்குப் போகலாம் அந்தப் பெண் கல்லூரி வெளி வாசலை நோக்கி நடக்க ஆரம்பிக்க தலை குனிந்தபடி அவளை தொடர்ந்தனர் அந்தப் பெற்றோர் அந்தப் பெண்ணின் தாய் கூட தன் மகளின் சோகத்தை தாங்கிக் கொண்டாள் ஆனால் அந்த அப்பாவால் அது முடியாமல் போனது.
மகளுக்கும் மனைவிக்கும் தெரியாமல் தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைப்பதற்காக வேறு பக்கம் திரும்பிய அந்த மனிதரை தற்செயலாக அந்தப் பக்கம் நின்றிருந்த இன்னொரு மனிதர் பார்த்து விட்டார் ஹலோ நீங்க ஏ.எம்.வி. மெஸ் ஓனர்தானே ஆமாம் என்ன விஷயமாக இந்தக் கல்லூரிக்கு கலங்கிய கண்களுடன் தன் கதையை சொன்னார் அதைக் கேட்டு விட்டு அந்த மனிதர் கல்லூரி நிர்வாகத்திடம் சென்று ஏதோ பேசி விட்டு வந்தார்.
அடுத்த நொடியிலேயே அந்த சூழ்நிலையே முற்றிலும் மாறிப் போனது அவர் மகளின் கனவு அன்றைய தினமே நிறைவேறியது அந்தப் பெண்ணின் கல்லூரி அட்மிஷன் செலவு முழுவதையும் ராமகிருஷ்ணா மடம் ஏற்றுக் கொண்டது ஆம் அந்த இளம்பெண் தான் ஆசைப்பட்டபடியே அந்தக் கல்லூரியில் சேர்ந்து விட்டாள்.
எப்படி நடந்தது இந்த அதிசயம் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை அருகில் என்ன ஸ்பெஷல் இந்த ஏ.எம்.வி. மெஸ்ஸில் ஒரு ரூபாய்க்கு முழு சாப்பாடு இதைப் பற்றி சொல்கிறார் வெங்கட்ராமன்கடந்த 2007ஆம் ஆண்டு முதல் மூன்று வேளையும் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை நோயாளிகளுக்கு ஒரு ரூபாயில் உணவு வழங்குகிறோம்.
காலையில் மருத்துவமனை உள்ளே சென்று கஷ்டப்படும் பத்து குடும்பங்களை கண்டு பிடித்து ஒரு ரூபாய் வாங்கிக் கொண்டு 10 டோக்கன் கொடுப்பேன் ஒரு டோக்கனுக்கு 3 தோசைகளும் 2 இட்லிகளும் வாங்கிக் கொள்ளலாம் அதே போல் பகலில் 40 டோக்கன்கள் கொடுப்பேன் இதில் முழு மதிய உணவு அவர்கள் திருப்தியாக சாப்பிடும் அளவுக்கு கட்டி கொடுத்து விடுவோம் அதே போல் இரவு 20 டோக்கன்கள் வழங்குகிறோம் இரவு நேரத்தில் 3 தோசை 2 சப்பாத்தி இருக்கும். வருங்காலங்களில் இதனை 100 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.