உலகின் மிகக் குறைந்த உயரமுள்ள ஒருவர் பாடி பில்டராக கின்னஸ் சாதனை பெற்ற நிலையில் அவருக்கு தற்போது திருமணம் நடந்துள்ளது, இந்த கின்னஸ் சாதனைக்காக அவர் பல ஆண்டுகள் கடுமையாக உடற்பயிற்சி செய்து உழைத்தார் என்பதும் அவரது உழைப்புக்கு கிடைத்த பலன் தான் கின்னஸ் சாதனை என்பதும் குறிப்பிடத்தக்கது.
3 அடி 4 அங்குலம் உயரம் மட்டுமே இருந்த மோஹித் தனது நெருங்கிய உறவினர்களாலே கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளான நிலையில் அவர் இந்த உலகில் எதையாவது சாதிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார் அப்போதுதான் அவர் பாடிபில்டர் ஆக முடிவு செய்தார்.
தனது உடல் அமைப்பை தகுந்த பயிற்சியாளர்களின் அறிவுரையை கேட்டு மாற்ற தொடங்கினார் என்பதும் அவர் தனது உடற்பயிற்சி உபகரணங்கள் வாங்குவதற்காகவே அதிக செலவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது மனம் தளராமல் அவர் தனது உயரத்தையே பாசிட்டிவாக மாற்ற வேண்டும் என்று முடிவு செய்த அவர் கடுமையாக பல ஆண்டுகள் உழைத்தார் உள்ளூர் பாடிபில்டர் போட்டிகள் மற்றும் தேசிய அளவில் நடந்த பாடிபில்டர் போட்டிகளில் அவர், எனது நண்பர்கள் எனக்கு ஆதரவாகவும் உதவியாகவும் இருந்தனர்.
அவர்களால் தான் என்னால் இந்த கின்னஸ் சாதனையை செய்ய முடிந்தது என்று கூறினார் 2021 ஆம் ஆண்டின் உலகின் மிக குறைந்த எடையக்கூடிய பாடிபில்டர் என்ற கின்னஸ் சாதனையை அவர் பெற்ற போது அவரது ஊரில் உள்ள அனைவருமே அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
கின்னஸ் சாதனை என்பது தனது இலக்காக இருந்தது என்றாலும் இவ்வளவு விரைவில் தனக்கு இந்த கௌரவம் கிடைக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் இதனால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் என் வாழ்க்கையில் இதை நான் மிகப்பெரிய சாதனையாக கருதுகிறேன் என்றும் தெரிவித்தார், இந்த நிலையில் விண்ண சாதனை பெற்ற அவருக்கு தற்போது திருமணம் நடந்துள்ளது.