கோவில் கட்டி வழிபடும் காதல் மனைவி..கணவன் மீது கொண்ட காதல் பாசத்தால்..ஒரு உண்மை சம்பவம்..!

மும்தாஜ் மீது கொண்ட காதலால் தாஜ்மஹாலை கட்டினார் ஷாஜஹான் அவர் அளவுக்கு தாஜ்மஹால் கட்ட முடியாவிட்டாலும் அவர் அளவுக்கு காதல் கொண்டவர்கள் தன்மீதான காதல் மனைவிக்கு பல கணவன்கள் கோவில் கட்டி வழிபட்டு வருகிறார்கள்.

பெண் ஒருவர் தன் கணவருக்கு கோயில் கட்டி அவரது உருவச் சிலைக்கு பூஜை செய்து வழிபட்டு வருகிறார் ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு நெகிழ்வான நிகழ்வினை காணமுடிகிறது அங்கி ரெட்டி பத்மாவதி தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார் சந்தோசமாக போய்க் கொண்டிருந்த இவர்களின் குடும்ப வாழ்க்கையில் திடீரென அந்த அதிர்வு ஏற்பட்டது.

விபத்து ஒன்றில் அங்கி ரெட்டி உ யி ரி ழ ந் து வி ட் டா ர் இதன் பின்னர் அவரின் நினைவாகவே வாழ்ந்து வந்திருக்கிறார் பத்மாவதி 5 வருடங்களுக்கு முன்பு கணவரை இ ழ ந் து விட்டாலும் இன்னமும் அதே நினைவுடன் வாழ்ந்து வந்திருக்கிறார் பத்மாவதி சமீபத்தில் இவரது கனவில் வந்த அங்கிரெட்டி தனக்கு கோயில் கட்டி வழிபடுமாறு கேட்டிருக்கிறாராம் இதனால் பத்மாவதி கணவருக்கு கோயில் கட்டி வழிபட முடிவு செய்திருக்கிறார்.

அதன்படியே கணவருக்கு கோயில் கட்டி கோயிலின் உள்ளே அவரது உருவச் சிலையை வைத்து பூஜைகள் செய்து வழிபட்டு வருகிறார் இந்தக் கோவிலை கட்டுவதற்கு பத்மாவதியின் மகனும் தெரிந்த நண்பரும் பண உதவி செய்ததாக அவர் தெரிவித்திருக்கிறார்.

தனது கணவரின் பிறந்த நாள், நினைவு நாள் மற்றும் பவுர்ணமி ஆகிய தினங்களில் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறார் பத்மாவதி,இந்த செயல் அப்பகுதியில் எல்லோரையும் நெகிழ வைத்திருக்கிறது.


Posted

in

by

Tags:

Comments

2 responses to “கோவில் கட்டி வழிபடும் காதல் மனைவி..கணவன் மீது கொண்ட காதல் பாசத்தால்..ஒரு உண்மை சம்பவம்..!”

  1. S SRIKANTH

    மிகவும் சிறந்த மனம்

  2. என்றும் உங்களோடு தான் வாழ்ந்துக்கொண்டு இருப்பாங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *