சிம்புவின் பத்து தல படம் பார்ப்பதற்காகச் சென்னை கோயம்பேட்டில் இருக்கும் ரோகிணி திரையரங்கத்திற்கு நரிக்குறவர் மக்கள் சென்றுள்ளனர் அவர்கள் டிக்கெட் எடுத்தும் கூட தியேட்டருக்கு வெளியே அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ள சம்பவம் பெரும் ச ர்ச் சை யை ஏற்படுத்தியது.
பின்னர் அவர்களை தியேட்டர் நிர்வாகம் படம் பார்க்க அனுமதி வழங்கினர் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவரையும் சிறுவன் ஒருவனும் அனுமதிச்சீட்டு வைத்திருந்தபோதிலும் உள்ளே அனுதிக்கமாட்டேன் என அனுமதிச்சீட்டு பரிசோதிப்பவர் முகபாவனை செய்கிறார்.
இந்த ஊழியர்கள் எதற்காக இவ்வாறு செய்கிறார்கள் என தெரியவில்லை ஆனால் படம் பார்க்க வந்ந இளைஞன் ஒருவன் அனுமதிச்சீட்டு வைத்திருந்தபோதும் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என கேட்க எதுவும் பேசாது அனுமதிக்க முடியாது என முகபாவனை செய்கிறார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர்கள் பல பேர் ட்வீட் செய்துள்ளனர்.
ஜீ.வீ. பிரகாஷ் கமல் ஹாசன் என நிறைய பேர் இதற்கு எதிர்பபு தெரிவித்துள்ளனர் முதலில் அனுமதிக்காவிட்டாலும் பின்னர் அனுமதித்துள்ளனர் ஆனாலும் இது தொடர்பாக 10 ஊழியர்களுக்கு அறிவுறித்தும் விதமாக துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டுள்ளது.
சொத்து வரி செலுத்தப்படவில்லை என புகார் இதற்கிடையில் 2022 -23 ம் நிதியாண்டில் மட்டும் ரோகிணி திரையரங்கம் ரூ.3.39 லட்சம் சொத்து வரி செலுத்தாமல் உள்ளது இதற்காக மாநகராட்சி நிர்வாகம் ரூ.10,000 அபராதம் விதித்திருந்தது.
அந்த சகோதரியும் சகோதரர்களும் பின் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது , எனினும் முதலில் அனுமதிக்க மறுத்தததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கலைகள் அனைவருக்கும் சொந்தமானது. https://t.co/IjGBzxLkJT
— G.V.Prakash Kumar (@gvprakash) March 30, 2023