கேரளாவில் தற்போதைய நவீன காலம் பெண்களுக்கான பல்வேறு கதவுகளை அகல திறந்து இருக்கின்றன அதன் காரணமாகவே பெண்கள் தங்களது சொந்தக் காலில் நிற்கும் வகையில் தங்களது கல்வியை மிகுந்த கவனத்துடன் பயின்று வருகின்றனர் திருமணத்திற்கு பிறகு கல்வி கற்கும் வாய்ப்பு பெண்களுக்கு ஒரு காலத்தில் மறுக்கப்பட்டு வந்ததை நாம் மறுத்து விட முடியாது ஆனால் அதேநிலையில் தற்போதைய சூழ்நிலை சற்றே மாறி இருக்கிறது.
அந்த வகையில் கேரளாவில் திருமணம் முடிந்த கையோடு மருத்துவ மாணவி ஒருவர் தேர்வு எழுத சென்று இருக்கிறார் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீ லட்சுமி அனில் இவர் அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றில் பிசியோதெரபி படித்து வருகிறார்.
இந்நிலையில் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது,செய்முறை தேர்வு அன்று திருமணம் நிச்சயிக்கப்படவே என்ன செய்வதென்று யோசித்த ஸ்ரீ லட்சுமி சரியாக திருமணம் முடிந்த கையுடன் மணக்கோலத்திலேயே சென்று தேர்வையும் எழுதி இருக்கிறார்.
அந்த வீடியோவில் அவர் கல்யாண புடவையில் கல்லூரிக்குள் நுழைகிறார் மணக்கோலத்தில் இருந்த அவருக்கு அவரது தோழிகள் கோட் அணிவித்து கழுத்தில் ஸ்டெதஸ்கோப்பை மாட்டி விடுகின்றனர் அதேபோல மற்றொரு வீடியோவில் ஸ்ரீ லட்சுமி கல்லூரிக்கு வரும் வழியிலேயே தேர்வுக்கு தயாராகி வருவதும் தெரிகிறது தேர்வு அறைக்குள் தோழிகளில் ஒருவர் அவரது புடவையை சரி செய்ய மற்றொருவர் அவருக்கு வாழ்த்து சொல்கிறார்.
பரிட்சை முடிந்து வெளியே வந்த ஸ்ரீ லட்சுமி தனக்காக காத்திருந்த தனது தாயை கட்டியணைத்து மகிழ்வதும் இந்த வீடியோவில் இடம்பெற்றிருக்கிறது இந்த வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவ பலரும் ஸ்ரீ லட்சுமிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.