தமிழகத்தின் அருப்புக்கோட்டை அருகே உள்ள கடம்பன் குளம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக், பொறியியல் பட்டதாரி படிப்பை முடித்து விட்டு வேலைக்காக லண்டனுக்கு சென்றுள்ளார் பணிபுரிந்த இடத்தில் பிரித்தானியாவை சேர்ந்த கேட்டியா ஒலி வேரா என்ற பெண் இருந்துள்ளார்.
இருவருக்கும் முதலில் பழக்கம் ஏற்பட்டுள்ளது, இது நாளடைவில் காதலாக மாற இருவரும் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டுள்ளனர் தற்போது வெளிநாட்டு பெண்கள் பலர் தமிழ் கலாச்சாரத்தில் திருமணம் செய்துக் கொள்வதால் இவர்களும் தமிழ் கலாச்சாரத்தில் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டுள்ளார்கள்.
இதற்காக கேட்டியா ஒலி வேரா என்ற பெயரை மீனாட்சி என மாற்றியுள்ளார் மேலும் மீனாட்சிக்கு பெற்றோர்கள் யாரும் இல்லாத நிலையில் மாப்பிள்ளையின் சொந்தபந்தங்கள் சூழ சொந்த ஊரில் திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளது கடைசியாக இருவரின் ஆசைப்படி திருமணம் நடந்து முடிய பலரும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.