தீவிர சிவன் பக்தனாக மாறிய மயில்சாமி..1 லட்சம் சம்பளம் வாங்கினால் வீட்டுக்கு ஐந்தாயிரம் மட்டும்தான் கொண்டு போவார்..

நடிகர் மயில்சாமி தமிழ் சினிமாவின் முக்கிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான மயில் சாமி, தனது நடிப்பினை சிறப்பாக வெளிப்படுத்தியவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையிலும் தொடர்ந்து சினிமாவில் நடித்து ரசிகர்களை மகிழ்ச்சியாக வைத்திருந்தார்.

நடிகர் மயில்சாமி தீவிர சிவன் பக்தர் என்பதால் மகாசிவராத்திரியை கொண்டாட சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று வந்த நிலையில் அதிகாலையில் ஏற்பட்ட தி டீ ர் மா ர டை ப் பி னா ல் உ   யி  ரி  ழ ந் து  ள் ளா ர்.

நடிப்பில் மட்டுமின்றி கொரோனா காலத்தில் அதிகமான பொதுசேவையிலும் ஈடுபட்ட இவர் உயிரிழக்கும் வரை தனது பொதுச் சேவையை தொடர்ந்தே இருந்தார் இவரின் செயல்களைக் குறித்தும், இவர் வாழ்ந்த வாழ்க்கையை குறித்தும் பிரபலங்கள் கூறிவரும் நிலையில், நடிகர் கிங்காங் மயில்சாமி குறித்து தகவல்களை பகிர்ந்துள்ளார்.

சிவன் பக்தராக மாற்றிய மயில்சாமி நடிகர் கிங்காங் கூறுகையில், தனது இனிய நண்பர்  மிகிக்ரி மன்னன் மயில்சாமி அவர்கள் அண்ணாமலையனின் தீவிர பக்தர் ஆவார் ஒவ்வொரு மாதம் பவுர்ணமி தினத்தில் திருவண்ணாமலை செய்வதை வழக்கமாக வைத்துள்ளார் அப்போது தன்னையும் அழைத்துச் சென்றுள்ளார் என்றும் மிகப்பெரிய மாலையை ஆர்டர் செய்து காரில் எடுத்துச் செல்வார் என்றும் தான் சிவன் பக்தனாக மாறியதற்கு காரணமே நடிகர் மயில்சாமி தான் என்று கூறியுள்ளார்.

நடிகர் மயில்சாமி 1 லட்சம் சம்பளம் வாங்கினால் வீட்டிற்கு எடுத்துச் செல்வது வெறும் ஐந்தாயிரமாகத் தான் இருக்குமாம் அந்த அளவிற்கு மற்றவர்களுக்கு உதவி செய்வதில் எந்தவொரு யோசனையும் இல்லாமல் உடனே செய்துவிடுவார் என்று பல தகவல்கள் வெளியாகியுள்ளது.


Posted

in

by

Tags: