தொலைத்த அம்மாவை 24 வயதில் தேடிப் பிடித்த மகன்.. நடந்த  நிகழ்வு பார்த்தீர்களா..இணையத்தில் பரவி வருகிறது அம்மா மகன் பாசம்..!

கேரளத்தில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள விதுரா பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வின்  24 வயதான இவருக்கு ஒரு வயது இருக்கும்போது குடும்பப் பிரச்னை காரணமாக இவரது அம்மாவும், அப்பாவும் பிரிந்துவிட்டார்கள்.

இந்த சோகத்திலேயே அஸ்வினின் அப்பாவும் தற்கொலை செய்துவிட்டார்  அதன் பின்னர் அஸ்வின் தன் பாட்டி விசாலாட்சியிடம் வளர்ந்துவந்தார் அஸ்வின் பத்தாம் வகுப்பு படிக்கும் போது, அவரது பாட்டியும் இறந்துவிட்டார்.

இதனால் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டார் அஸ்வின்  ஒருகட்டத்தில் அஸ்வினுக்கு மேஜிக் நிபுணராக வேண்டும் என ஆசை இதனைத் தொடர்ந்து மேஜிக் நிபுணர் கோபிநாத் முதுகாடுவிடம் சேர விரும்பினார்.

ஆனால் அந்த முயற்சி கைகூடவில்லை தொடர்ந்து அதற்கான முயற்சியிலேயே ஈடுபட திருவனந்தபுரத்திலேயே தங்கியிருந்து, வயிற்றுப்பிழைப்புக்காக காலி பீர் பாட்டில்களை விற்று வந்துள்ளார் ஒருகட்டத்தில் மேஜிக் நிபுணர் முதுகாடுவிடமும் வேலைக்குச் சேர்ந்துவிட்டார்,இந்த பணிகளுக்கு மத்தியில் அஸ்வின் தன் அம்மாவைத் தேடிவந்தார், இந்நிலையில் ஒரு அகதிகள் முகாமில் தாய் லதா தங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

உடனே அஸ்வின் அங்குப் போனார்  ஆனால் மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அவரது தாய் லதாவுக்கு அஸ்வினை அடையாளம் தெரியவில்லை ஆனாலும் அஸ்வின் தாயை தன்னோடு வைத்துப் பராமரிக்கப் போவதாகச் சொல்லி அழைத்து தன்னோடு வைத்துள்ளார்,2வயதில் தொலைத்த தன் தாயை, 24 வயதில் தேடி பிடித்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *