நம்ம ஊரு இட்லி வெள்ளையா தான் இருக்கும்..இது என்ன புதுசா இருக்கு இந்த இட்லியை சாப்பிட்டு இருக்கீங்களா..!

ஆந்திர மாநிலம் குண்டூரில் அமைந்துள்ளது சுதீரின் ‘வாசனபோலி’ எனும் திணை இட்லி மற்றும் தோசைக்களுக்கான கையேந்திபவன் காலை வேளையில் பிசியஸ்ட் கையேந்திகளில் ஒன்றாகயிருக்கும் வாசனபோலி கல்லுாரி மாணவர்கள், ஜிம் பாய்ஸ் மற்றும் மருத்துவ மாணவர்களின் ஹாட்ஸ்பாட்டாகும்.

நாகார்ஜுனா பல்கலைக்கழகத்தில் வேளாண் பொருளியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர் சுதீர் கல்லுாரி படிப்பினை முடித்தவுடன் இயற்கை விவசாயத்தை தொடர்வதையே திட்டமாக கொண்டிருந்துள்ளார் ஊருக்கு திரும்பி விவசாயம் செய்வதற்கான வேலைகளில் இறங்கினார், அப்போது தான், சிறுதானியங்களின் உற்பத்திக்கு ஏற்ற நுகர் வோரில்லை என்பதை புரிந்துகொண்டார்.

விவசாயிகளுடன் உரையாடியதில் திணைகளின் வீழ்ச்சிக்கான காரணங்களை புரிந்து கொண்டார் சிறுதானியங்களுக்கான மார்க்கெட்டை ஏற்படுத்தி அதற்கான நகர்புற நுகர்வோர்களை உருவாக்க எண்ணினார் இட்லி தானே என எண்ணினாலும் சரியான விகிதத்திலான இட்லி மாவை கண்டறிய அவருக்கு முழுதாக 2 ஆண்டுகளாகியுள்ளது ஏனெனில் சுதீர் யாருடைய தடத்திலும் நடக்க விரும்பவில்லை மாவு அரைப்பது குறித்த யூ டியூப் வீடியோக்களை பார்க்க தவிர்த்து விட்டார்.

ஆந்திர பல்கலைக்கழகம் மற்றும் தினை ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர்களிடமிருந்து ஊட்டச்சத்து குறித்த தகவல்களை திரட்டி முறையான ஆராய்ச்சியில் பல கட்ட பரிசோதனைகளுக்கு பிறகு பெர்பெக்ட் இட்லிமாவை அரைத்துள்ளார் அவரது எண்ணம் நிறைவேறியதுடன் அதிகளவிலான யங்க் கஸ்டமர்களை பெற்றார் அதனால் தான் வாசனபோலிக்கு ஸ்விக்கியிலுமிருந்து ஆர்டர்கள் கிடைக்கின்றனர்.

மாவு தயாரிப்பதில் மட்டுமின்றி இட்லியை அவிப்பதில் தனித்துவத்தை கையாள்கிறார் சுதீர்மந்தாரை இலையினை கூம்பு வடிவில் சுற்றி டூத்பிக் கொண்டு இணைத்து கொண்டு அதில் மாவு ஊற்றி கூம்பு வடிவில் இட்லிகளை தயாரிக்கிறார் காலங்காலமாய் லுக்கில் அப்டேட்டாகமாலே இருக்கும் இட்லிக்கு இவர் கொடுத்திருக்கும் புது வடிவமே ருசிக்க துாண்டுகிறது.

 

 

 


Posted

in

by

Tags: