நாட்டின் மகான்கள் செல்பி எடுத்திருந்தால் எப்படி இருந்திருக்கும்.. ஒரு கற்பனை ஓவிய செல்பி அனைவரும் பாருங்கள்…!

தற்போது போட்டோ செல்பி என்றால் சின்னக்குழந்தைக்கு கூட தெரியும் ஆனால் முந்தைய காலத்தில் செல்போன் என்றாலே என்னவென்று தெரியாது ஆனால் நம் முன்னோர்கள் தற்போது இருந்திருந்தால் இந்த நவீன யுகத்தை எப்படி அனுபவத்திருப்பார்கள் என்று சில கற்பனையை புகைப்படங்கள் மூலம் காட்டியிருக்கிறார்கள் இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.

இன்ஸ்டாகிராமில் டிஜிட்டல் கலைஞர் ஒருவர் மிட்ஜர்னி AI மற்றும் ஃபோட்டோஷாப் ஆகியவற்றைப் பயன்படுத்தி, கடந்த காலத்திலிருந்து உலகத் தலைவர்கள் ஸ்மார்ட்போன்கள் வைத்து செல்ஃபிகள் எடுப்பது போல சில உருவங்களை வடிவமைத்திருக்கிறார்கள் மாதவ் கோலி என்ற ஓவியர் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி வரைந்த இந்தியாவின் பழங்கால அரசர்களின் படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கற்பனையால் மனதில் வரைந்த சத்ரபதி சிவாஜி, அசோகர், அக்பர், சந்திரகுப்த மௌரியர், அலாவுதீன் கில்ஜி என அந்தக் காலத்து அரசர்களுக்குச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவம் கொடுத்திருந்தார்.

மேலும், பல தசாப்தங்களுக்கு முன்பு வாழ்ந்த தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களை செல்பி எடுத்துக்கொண்டிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற கற்பனை ஓவியங்களாக வெளிவந்துள்ளன.

ஜியோ ஜான் முள்ளூர் என்ற கலைஞர், மகாத்மா காந்தி, அம்பேத்கர், அன்னை தெரசா, எல்விஸ் பிரெஸ்லி உள்ளிட்டோரின் இந்த செல்பிக்களுக்கு உயிர் கொடுத்து இருக்கிறார்.


Posted

in

by

Tags: