பயமில்லாமல் பையனை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த தாய்..நடந்த நிகழ்வை பார்த்தீங்களா..!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த திப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த ரவி என்பவரது மகன் பூவரசன் இவர் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் விவசாய தொழிலை செய்து வந்துள்ளார் வீட்டின் மாட்டு தொழுவத்தில் சாணம் மற்றும் குப்பைகளை அள்ளி அருகில் சென்று கொட்டுவது வழக்கமாக வைத்துள்ளார் சம்பவத்தன்று குப்பை அள்ளும் போது குப்பைக்குள் மறைந்திருந்த பாம்பு பூவரசனைக் கடித்துள்ளது.

தில் அலறிய பூவரசனின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்த நிலையில், அவரை கடித்த பாம்பு எஸ்கேப் ஆவதைக் கண்டு அதனை லாவகமாக பிடித்து, தண்ணீர் போத்தலில் அடைத்து வைத்துள்ளனர்.

பின்பு அவரை இருசக்கர வாகனத்தில் வைத்து மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பூவரசனின் தாய் அவரைக் கடித்த பாம்பையே மருத்துவமனைக்கு கொண்டு வந்தது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.


Posted

in

by

Tags: