பூஜை அறைகளில் இந்த தவறை மட்டும் செய்யாதீங்க,வீட்டு பூஜை அறையில் சிலைகள் வைத்து வழிபடலாமா..!

பொதுவாக வீட்டு பூஜை அறைகளில் சாஸ்திரப்படி கடவுளின் புகைப்படங்களை வைத்து வழிபடுவதை நாம் அவதானித்திருப்போம் ஆனால் சிலர் சிலைகளை வைத்தும் வழிபடுவார்கள் இவ்வாறு சிலைகளை வைத்து வழிபட்டால் எவ்வாறு இருக்க வேண்டும்?அவ்வாறு வழிபடலாமா?என்பதை தற்போது தெரிந்து கொள்ளலாம் சிலைகளை வைத்து வழிபடக்கூடாது ஏன்.

பொதுவாக கருங்கல்லால்,பளிங்கு கல்லால், ஸ்படிக சிலைகள் என எந்த சிலைகளாக இருந்தாலும்,அதற்கு தினமும் அபிஷேக ஆராதனை செய்ய வேண்டும்,இவ்வாறு தினமும் அபிஷேக ஆராதனைகள் வீட்டில் செய்யமுடியாது என்பதால் சிலைகளை வைத்து வணங்குவது கூடாது என்று கூறியுள்ளனர்  வேண்டுமெனில் அரை அடி உயர்த்தில் தெய்வ சிலையினை வைத்து வழிபடலாம் ஆனால் அதற்கும் தினம் இவ்வாறான பூஜைகள் செய்ய வேண்டும்.

குறிப்பாக பன்னீர்,பால்,தயிர்,சந்தனம் என பொருட்களால் செய்யமுடியாவிட்டாலும் வெறும் தண்ணீரைக் கொண்டே அபிஷேகம் செய்து ஆராதனை செய்யலாம்,தினமும் செய்யமுடியாத பட்சத்தில் வாரத்தில் ஒருமுறை கட்டாயம் இதனை மேற்கொள்ள வேண்டும்.

இதுவே விநாயகர் சிலை என்றால்,சதுர்த்தி அன்றும், சிவலிங்கம் என்றால் சோமவாரம் மற்றும் பிரதோஷ நாளிலும், முருகன் சிலையினை சஷ்டி மற்றும் கிருத்திகை நாளிலும் கண்டிப்பாக அபிஷேகம் செய்து ஆராதனை மேற்கொள்ள வேண்டும்.

தினமும் விளக்கு ஏற்றுவதை கட்டாயம் செய்வதுடன், நைவேத்தியமாக பால்,வாழைப்பழம், கற்கண்டு, பேரிட்சை என இதில் ஒன்றாவது தினமும் படைத்து வழிபட வேண்டுமாம்,அதே போன்று முதல்நாள் படைத்த பழம், கற்கண்டு இவற்றினை வைத்து மறுநாள் பூஜை செய்யக்கூடாது,மேலும் பூஜையில் இருக்கும் பொருட்களை பூஜை முடிந்த 30 நிமிடத்திற்குள் எடுத்துவிட வேண்டும்.

மேலும் காய்ந்த பூக்களை அடுத்த நாள் கட்டாயம் அகற்றிவிட வேண்டும் மேலும் காய்ந்த பூ, மற்றும் பூஜைக்கு பயன்படுத்திய பொருட்களை பூஜை அறையில் குப்பைகளோடு வைத்திருக்கக் கூடாது,இவை வீட்டில் எதிர்மறை சக்தியை கொண்டு வருவதுடன், வீட்டில் தெய்வீக கடாட்சத்தையும் நீக்கிவிடுமாம்.


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *