பொதுவாகவே பெண்கள் பூ வைத்துக் கொண்டால் அவ்வளவு லட்சணமாக இருப்பார்கள் அப்படியான ஒரு காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பூ வைத்து விட்ட பாட்டி பத்திரிக்கையாளரும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான அலெக்ஸ் அவுட்வெயிட் கடந்த ஆண்டு தனது டைம்லெஸ் தமிழ்நாடு நிகழ்ச்சியின் படப்பிடிப்புக்காக இந்தியா வந்திருந்தார்,அலெக்ஸ் இந்தியாவில் இருக்கும மாநிலத்தின் கடற்கரைகள் மலைகள் மற்றும் பின்வாங்கல்களை ஆராய்ந்து வந்திருக்கிறார் மேலும், அவர் தென்னிந்திய மாநிலத்தில் இருந்தபோது நிறைய நண்பர்களை உருவாக்கியிருக்கிறார்.
அப்போது அவர் பெப்ரவரி 14 அன்று டுவிட்டரில் தன்னைப் பின்தொடர்பவர்களுடன் ஒரு அழகான சிறிய வீடியோவைப் பகிர்ந்துள்ளார்,அதில் ஒரு பாட்டி மகிழ்ச்சியுடன் அலெக்ஸின் தலைமுடியில் பூ வைப்பதைப் காட்டுகிறது.
மதுரையில் படமாக்கப்பட்ட அந்த வீடியோவில் அலெக்ஸ் மார்க்கெட் போன்ற பகுதியில் காட்சியளிக்கிறார் ஒரு பாட்டி அலெக்ஸின் தலைமுடியில் பூவை பொருத்திக் கொண்டு அவருடன் உரையாடுவதைப் போல இருக்கிறது அப்போது அப்பெண் தனக்கு இன்னும் அழகாக இருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் தலை அசைக்கிறார்.
Making friends in Tamil Nadu 🇮🇳 pic.twitter.com/x2C1OrvFLQ
— Alex Outhwaite (@AlexOuthwaite) February 14, 2023