தமிழ் ரசிகர்கள் பலருக்கும் மதுரை முத்துவை தெரிந்திருக்கும் இவரது கொமெடிகளுக்கு சிரிக்காத ஆளே இருக்க மாட்டார்கள் அந்தளவுக்கு மிக வேகமாக சரியான நேரத்தில் நகைச்சுவையை அள்ளி வழங்குவதில் வல்லவர் இவர் ஒரு மேடைப்பேச்சாளரும் கூட அசத்தப் போவது யாரு? கலக்கப் போவது யாரு ? என பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உலகப் புகழ் பெற்றார்.
அதிலும் குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவரது ஜோக்குகளுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு இந்நிலையில் தற்போது யாழ் இசை குழுவில் இணைந்து பாடகராக மாறிய வீடியோ வைரலாகி வருகிறது, இதை அவரே பே ஸ் புக் பக்கத்தில் பதிவிட பலரும் வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.