மு த் த ம் கொ டு ப்ப தற் கா க கண்டுபிடித்த கருவி..இது என்னடா புதுசா..இருக்கு எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க..!

பொதுவாகவே தொலைத்தூரத்தில் இருக்கும் காதலர்களைப் பிரிந்து நாடு விட்டு நாடு வாழ்வார்கள் அவ்வாறு வாழும் சிலர் தங்கள் காதலிக்கு முத்தத்தை பரிமாறிக்கொள்ள வசதி இருக்காது அவ்வாறு இருப்பவர்களுக்காகவே சீனாவில் ஒரு சாதனம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

ரிமோட் முத்த சாதனம் நாடு விட்டு நாடு காதல் செய்பவர்களுக்கு முத்தத்தைப் பரிமாற்றிக் கொள்ளவதற்கு கருவியொன்றை கண்டுப்பிடித்திருக்கிறார் சீனாவைச் சேர்ந்த ஜியாங் சோங்லி, இந்த சாதனம் ஒரு முத்தமிடும் சாதனம் தொலைதூர தம்பதிகள் மெய்நிகர் நெருக்கமான தருணங்களைப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கும் நோக்கம் கொண்டதாகவே காணப்படுகிறது.

சிலிக்கான் லிப்ஸ் உடன் உள்ள கான்ட்ராப்ஷனில் பிரஷர் சென்சார்கள் மற்றும் ஆக்சுவேட்டர்கள் இதில் இருக்கின்றன மேலும் இது உண்மையான முத்தத்தைப் பிரதிபலிக்கும் என்று சீனா நடத்தும் குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது, இந்த சாதனம் பயனரின் உதடுகளின் அழுத்தம் இயக்கம் மற்றும் வெப்பநிலை ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் என்று அறிக்கை கூறுகிறது.

பயனர்கள் மொபைல் பயன்பாட்டைப் பதிவிறக்கி, சாதனத்தை மொபைலின் சார்ஜிங் போர்ட்டில் இணைக்க வேண்டும். பயன்பாட்டில் கூட்டாளருடன் இணைந்த பிறகு, அவர்கள் ஒரு வீடியோ அழைப்பைத் தொடங்கலாம் மற்றும் அவர்களின் முத்தங்களின் பிரதிகளை ஒருவருக்கொருவர் அனுப்பலாம், இந்த சாதனத்தை கண்டுபிடித்த ஜியாங் ஜாங்லி தனது காதலியுடன் நீண்ட தூர உறவில் இருப்பதாகவும்  தொலைபேசி மூலம் மட்டுமே தொடர்பில் இருக்க முடியும் என்றும் கூறினார்.

2016 ஆம் ஆண்டில் மலேசியாவில் உள்ள இமேஜினியரிங் நிறுவனம் தொடு உணர் சிலிக்கான் பேட் வடிவில் கிஸ்ஸிங்கர்’ என்ற பெயரில் இதே போன்ற சாதனத்தை அறிமுகப்படுத்தியதாக சிஎன்என் தெரிவித்துள்ளது, பயனர்கள் தங்கள் முத்தங்களை மற்றவர்கள் பதிவிறக்கம் செய்ய பயன்பாட்டில் பதிவேற்றலாம் சாதனத்தின் விலை 288 யுவான் (₹3,433) என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Posted

in

by

Tags: