யார் இந்த அன்னபூரணிஅம்மா சாமியார்? பல உண்மைகள் வெளியானது..தெறிக்கவிடும் சாமியார்..பொதுமக்கள் செய்யும் பூஜை..!

உலக மக்களை காத்தருள ஆதிபராசக்தி அன்னபூரணி அம்மா அவதாரம் எடுத்துள்ளதாகக் கூறி செங்கல்பட்டு சுற்றுப்பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் மட்டுமின்றி, சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

யார் இந்த ஆதிபராசக்தி அம்மா என தேடியதில் இணையத்தில் ஒரு பேஸ்புக் பக்கம் சிக்கியது ஆதிபராசக்தி அன்னபூரணி அம்மா என்கிற ஃபேஸ்புக் பக்கத்தில் தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் எனக் கூறிக் கொண்டு பக்தி பரவசத்தில் பொதுமக்கள் செய்யும் பூஜை வீடியோக்கள் ஏராளமான பதிவு செய்யப்பட்டுள்ளது.

எல்லாமே நெட்டிசன்களுக்கான கண்டெண்ட் ரகம் சொல்லப்போனால் நம்ம ஜெய் பாலையா ,நித்தி சாமிக்கு எல்லாம் டஃப் கொடுக்கிற அளவுக்கு கண்டெண்ட் இருக்கு. தாயி மகமாயி வேதபுர காளி என ஹைப்பிச்சில் ஒலிக்கிறது பாடல்கள்.

அம்மன் கோயில்களில் விஷேச நாள்களில் ஒலிக்கும் எல்லா பாடல்களும் இந்த அம்மாவுக்காக எடிட் செய்யப்பட்டிருக்கிறது எல்லை மீறிப்போறீங்கன்னு.. பக்தர்கள் டென்சன் ஆக வேண்டாம்.

இந்த திடீர் அம்மா குறித்து தேடுனா தனியார் நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பாகும் ஒரு பிரபல நிகழ்ச்சியில் இந்த அன்னபூரணி பங்கேற்ற வீடியோக்களை ட்ரெண்டிங்கில் விட்டிருக்காங்க நெட்டிசன்கள் பார்த்து தெரிந்துக்கொள்ளவும் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்ற வசனம் அடிக்கடி இடம்பெறும் நிகழ்ச்சி அதுஇந்த நிகழ்ச்சியில் பக்கத்து வீட்டுக்காரரோட பிரச்னைன்னு இந்த அன்னபூரணி வந்திருக்காங்க.

இந்த அன்னபூரணி தான் ஆதிபராசக்தி அன்னபூரணி அம்மா அவதாரம் எடுத்திருக்காங்க

செங்கல்பட்டு மாவட்டம் நேரு நகர் திருப்போரூர் கூட்ரோடு சாலையில் உள்ள வாசுகி திருமண மண்டபத்தில் ஜனவரி ஒன்றாம் தேதி அருள் வாக்கு சொல்லவிருப்பதாக போஸ்டர் ஓட்டி இருக்காங்க.

இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், திருமண மண்டபத்தில் நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என மண்டப உரிமையாளரை போலீசார் எச்சரித்துள்ளனர்.

தடையை மீறி அருள்வாக்கு சொல்ல அனுமதித்தால் மண்டபத்தின் உரிமையாளர் மீது முதல் குற்றவாளியாக வழக்கு பதியப்படும் என்று எச்சரித்துள்ளனர். அருள்வாக்கு அன்னபூரணி அம்மா என கூறிக்கொள்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *