வுனியாவில் முதலிடம் பெற்ற நிர்ஷிகா சத்தியகீர்த்தி.. பொறியியலாளராவதே எனது இலட்சியம்..நடந்து நிகழ்வு பார்ப்போம்.!

நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை 2022 இன் பெறுபேறுகள் கடந்த 25.01. 2023 அன்று வெளியாகியிருந்த நிலையில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவி செல்வி நிர்ஷிகா சத்தியகீர்த்தி 190 புள்ளிகளைப் பெற்று வவுனியா மாவட்டத்தில் முதல் நிலையில் சித்தி அடைந்துள்ளமை யாவரும் அறிந்ததே.

பாடசாலையின் விடுமுறை காலத்தில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகிய நிலையில் நேற்றைய தினம் 13.02.2023 (திங்கட்கிழமை) பாடசாலை சமூகத்தை நேரில் சந்தித்து தனது மகிழ்ச்சியினையும் நன்றியினையும் தெரிவித்துக் கொண்ட நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வின்போது தனது வெற்றிக்கு வழிகாட்டிய அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர் உறவினர்கள் நலன் விரும்பிகளுக்கும் பாடசாலை சமூகத்திற்கும் நன்றி பாராட்டியதுடன் எதிர்காலத்தில் பொறியியலாளராகி இந்த நாட்டிற்கும் மக்களுக்கும் சேவை செய்வதே தனது எதிர்கால இலட்சியம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.


Posted

in

by

Tags: