தாய் நினைத்தால் எதையும் செய்ய முடியும் என்ற சொல்லுக்கு எடுத்துக்காட்டு..காது கேட்காத மகனே ஐ.ஏ.எஸ்  தேர்வில் வெற்றி பெற வைத்த தாய்.!

ஈரோட்டைச் சேர்ந்த தாய் அமிர்தவள்ளி காது கேட்காத மாற்றுத்திறனாளி மகனுக்கு பிறர் பேசுவதை உணர வைத்து நன்றாக பேச வைத்து, ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற வைத்துள்ள  அமிர்தவள்ளி என் மகன் ரஞ்சித்துக்கு சிறிது பேச வரும் என்றாலும் காது கேட்காது என்பதை அவன் பிறந்து ஏழு மாதங்கள் கழித்து தான் எங்களுக்கு தெரிந்தது.

சிறப்பு மருத்துவரிடம் காண்பித்த போது காது கேளாதவர்களுக்கு பேச பயிற்சி தரும் சிறப்பு பள்ளியில் சேருங்கள் என்றார் அதற்கான பள்ளியை நாகர்கோவிலில் கிறிஸ்டோபர் என்பவர் நடத்தி வருகிறார் என்பதை கேள்விப்பட்டு அங்கு சென்றோம் கிறிஸ்டோபர்  லண்டனில் பயிற்சி பெற்றவர்.

பிறர் பேசும்போது உதடுகளின் அசைவை வைத்து அவர்கள் என்ன பேசுகின்றனர் என்பதை புரிந்து காது கேட்கும் சக்தி இல்லாதவர்களால் பேசவும் முடியும் என்றார் அதன் பிறகு தான் காது கேளாதவர்களும் பேசலாம் என்பதை உணர்ந்தேன் என் மகனை பேச வைக்கும் முறைகளை கிறிஸ்டோபர் எனக்கு பயிற்சி அளித்தார்.

அதற்காக காது கேளாதோரை பேச வைக்கும் படிப்பில் பி.எட். முடித்தேன் அதே சமயம்  கோவையில் தனியார் சர்க்கரை ஆலை நிறுவனத்தின கஸ்துார்பா காந்தி காது கேளாதோர் வாய்மொழி பயிற்சி பள்ளி யை துவங்கினர்.

எனக்கு அந்த பள்ளியில் ஆசிரியை வேலை கிடைத்தது மகனையும் அதே பள்ளியில் சேர்த்தேன் ‘அ’ என்று நான் உரக்க சொல்லுகையில் தொண்டையில் ஏற்படும் அதிர்வுகளை ரஞ்சித்தை தொட்டு உணரச் செய்து எப்படி ஒலி உருவாகிறது என்பதை புரிந்து கொள்ள வைத்தேன்  ஒற்றை எழுத்துக்களுக்கு பின் வார்த்தைகளை கற்றுக் கொடுத்தேன்  பலமுறை உச்சரித்து பயிற்றுவித்தேன்.

தனியார் தொழில்நுட்ப கல்லுாரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்தான் ஐ.ஏ.எஸ். தேர்வையும் தமிழில் தான் எழுதினான் டில்லியில் நடந்த நேர்முக தேர்வுக்கு தனியாக சென்று வந்தான் தற்போது நன்றாக பேசுகிறான்.


Posted

in

by

Tags: