தமிழ் திரை உலகின் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் நடிகை நயன்தாரா 2005 ஆம் ஆண்டு வெளியான ஐயா என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையு உலகிற்கு அறிமுகமாகி 20 ஆண்டுகளில் சுமார் 75 இருக்கும் அதிகமான படங்களில் நடித்து முடித்திருக்கிறார் நயன்தாரா, இவர் கடைசியாக கனெக்ட் என்கிற பேய் படத்தில் நடித்திருந்தார்.
தற்போது ஷாருக்கான் உடன் இணைந்து ஜவான் என்கிற தனது முதல் இந்தி படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை இயக்குனர் அட்லீ இயக்கி வருகிறார் தமிழில் இறைவன் என்கிற படத்தில் நடித்து வருகிறார், இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் இவனுக்கும் நானும் ரவுடிதான் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது காதல் மலர்ந்தது கடந்த ஏழு வருடங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த வருடம் ஜூன் மாதம் சென்னையில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
தனது கணவருடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலமாக சில படங்களை தயாரித்தும் இருக்கிறார் அதற்கு முன்பும் சில படங்களை அவர் தயாரித்திருக்கிறார் நெற்றிக்கண், ராக்கி, காத்து வாக்குல ரெண்டு காதல், கனெக்ட் போன்ற பல படங்களை அவர் தயாரித்து இருக்கிறார்.
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் உடன் திருமணம் முடிந்த நான்கே மாதங்களில் தனக்கு இரட்டை குழந்தை பிறந்ததாக அறிவித்திருந்தார் நயன்தாரா இது கடுமையான சர் ச்சையை கிளப்பிய நிலையில், இருவரும் வாடகை தாய் முறையில் குழந்தைகளை பெற்றுக் கொண்ட விஷயம் தெரியவந்தது, 7 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்துள்ள விஷயம் வெளியில் கசிந்தது.
இந்த சர்ச் சைகள் எல்லாம் ஓய்ந்தது தற்போது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் நயன்தாரா மகன்களின் முகத்தை மறைத்து புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் நயன்தாரா ஆனால் அவர்கள் இருவரும் தனது மகன்களை அழைத்துக் கொண்டு விமான நிலையத்திற்கு வந்திருக்கின்றனர்.
#Nayanthara and @VigneshShivN with her twin babies at Mumbai airport pic.twitter.com/BX7ogevQ1q
— sridevi sreedhar (@sridevisreedhar) March 8, 2023