வீட்டிலேயே கேஸ் பர்னல் சுத்தம் பண்ணிக்கலாமா…அட இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே.. மக்களே இதோ உங்களுக்காக..!!

உங்கள் வீட்டுச் சமையலறையில் கேஸ் அடுப்பு இருக்கும். இந்த கேஸ் அடுப்பை பராமரிப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்று என்பதை புரிந்து கொள்ளுங்கள் அதிலும் இந்த அடுப்பில் நீங்கள் வைக்கும் சாதம் பால் போன்றவை பொங்கி வழிந்து விட்டால் அதை சுத்தம் செய்வது என்பது ஒரு மிகப்பெரிய வேலையாக இருக்கும் அதுமட்டுமில்லாமல் கேஸ் பர்னர் கருத்து போய்விட்டால் அதை இப்படி சுத்தம் செய்வது என்று தெரியாமல் பலரும் விழித்துக் கொண்டிருக்கிறார்கள் அப்படிப்பட்ட கேஸ் அடுப்பில் இருக்கும் கேஸ் பர்னர் எப்படி சுத்தம் செய்யலாம் என்பதை பற்றி விரிவாக எந்த கட்டுரையில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

கேஸ் பர்னரை சுத்தம் செய்யும் முறை, உங்களுக்கு அஜீரண கோளாறு ஏற்பட்டால் ஈனோ என்ற ஒரு கெமிக்கல் பொருளை வாங்கி அதை நீரில் கலந்து குடிப்பீர்கள் அந்த ஈனோ பவுடரை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் அந்த பவுடரோடு நீங்கள் அரை கப் அளவுக்கு வினிகரை சேர்த்து கொள்ளுங்கள், பிறகு இந்த கரைசலில் உங்கள் கேஸ் அடுப்பு பர்னரை அப்படியே போட்டுவிட்டு கொதிக்கின்ற நீரை பர்னர் முங்கும் அளவுக்கு ஊற்றி விடுங்கள். அரை மணி நேரம் கழித்து நீங்கள் பர்ணரை எடுத்துப் பார்த்தால் தெரியும்.

அதில் இருக்கும் அழுக்குகள் நீங்கிவிடும் இப்போது இந்த பர்னரை நீங்கள் நன்கு துடைத்து சுத்தம் செய்து ஊசியின் மூலம் அதன் துளைகளை குத்தி விடலாம். அப்போது அந்தத் துளைகளில் ஏதாவது அடைத்திருந்தாலும் அது அப்படியே சரியாகிவிடும், மேற் கூறிய எந்த முறையை நீங்கள் ஃபாலோ செய்து கண்டிப்பாக பாருங்கள் உங்கள் பர்னர் பளிச்சென்று மின்னும் அது மட்டுமல்ல பக்கத்தில் வீட்டில் இருப்பவர்களும் உங்கள் கேஸ் அடுப்பு பர்னரை பார்த்தால் இது எப்படி இப்படி மின்னுகிறதே என்று ஆசிரியத்தில் கேட்பார்கள் நீங்களும் அவர்களுக்கு இதை எடுத்துக் கூறுவதின் மூலம் உங்களின் அலாதியான புத்திசாலித்தனத்தை கண்டு பாராட்டுவார்கள்.


Posted

in

by

Tags: