இலங்கை கிண்ணையடி பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார், எள்ளுப்பிள்ளை எனும் 76 வயதுடைய பாட்டியொருவர் அவருடைய வீட்டில் நாயொன்றை வளர்த்து வந்துள்ளார், அப்போது குறித்து பாட்டிக்கு திடீரென ஒரு நாள் உடல் நிலை முடியாமல் சென்றுள்ளது இதனால் பாட்டிக்கு நாயைபார்த்துக் கொள்ள முடியாத காரணத்தால் அந்த பாட்டியின் உறவினர் வீட்டுக்கு அனுப்பட்டுள்ளது.
கண்ணீருடன் இறுதி அஞ்சலி செய்த காட்சி, இந்த நிலையில் குறித்த பாட்டியை இறுதிச்சடங்கிற்காக வைத்திருந்த நிலையில், நாய் பக்கத்தில் சென்று கண்ணீர் சிந்தியுள்ளது இதனை பார்த்த அப்பகுதி மக்கள் ஆச்சரியத்தில் இருந்துள்ளார்கள் இதன் பின்னர் பாட்டியை அடக்கம்செய்ய நீண்ட தூரம் தூக்கி சென்ற போது இந்த நாயும் இறுதி வரை சென்று அதன் இரங்கலை தெரிவித்துள்ளது.
இதனை பார்த்த அப்பகுதிக்கள் நாயின் நன்றி, விசுவாசத்தை கண்டு வியப்படைந்துள்ளார்கள்.