24 வகையான வளைகாப்பு சாதம் மற்றும் 48 சீர்வரிசையை ஊர்வலமாக..பசுமாட்டுக்கு வளைகாப்பு நடத்த நிகழ்வு பார்ப்போம்..!

தமிழகத்தில் கோவில் பசுமாட்டுக்கு சீர்வரிசை வைத்து வளைகாப்பு நடத்தியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது சமீக காலங்களாக வீட்டில் வளர்க்கப்படும் நாய்க்கு வளைகாப்பு செய்து உரிமையாளர்கள் மகிழ்வதை நாம் புகைப்படமாக அவதானித்திருந்தோம் தற்போது பசுவிற்கு வளைகாப்பு நடத்திய சம்பவத்தை குறித்து தெரிந்து கொள்வோம்.

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் கிராமத்தில் உள்ள கோவில் பசுவுக்கு கோவில் நிர்வாகிகள் பக்தர்கள் இணைந்து வளைகாப்பு நிகழ்ச்சியை கொண்டாடினர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மேலபட்டு கிராமத்தில் வீற்றுள்ள திரிபுரசுந்தரி அம்மன் கோவிலில் வளர்க்கப்பட்டு வரும் பசுமாடு அம்சவேணி.

இந்த பசுமாட்டிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்ட நிலையில்  500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு 24 வகையான வளைகாப்பு சாதம் மற்றும் 48 சீர்வரிசையை ஊர்வலமாக கொண்டு வந்துள்ளனர் தொடர்ந்து பசுவிற்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தி நீராடி மாலை அணிவித்ததுடன், காலில் சலங்கை கட்டி வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர் குழந்தை இல்லாத தம்பதிகள் கலந்து கொண்டு குறித்த பசுவிற்கு வளையல் அணிவித்தும், மஞ்சள் பூசியும் வணங்கியுள்ளனர் மேலும் இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் சுற்றி உள்ள கிராம மக்கள் நெகிழ்ச்சியுடன் கலந்து கொண்டுள்ளனர்.


Posted

in

by

Tags: