30 வயது இளம் பெண் காதலியை நான்காவது திருமணம் செய்த விண்வெளி வீரர்..93 வது வயதில்..!!

1969 ஆம் ஆண்டு அப்பல்லோ 11 விண்கல பயணத்தில் சந்திரனில் கால் பதித்த மூன்று அமெரிக்க விண்வெளி வீரர்களில் ஒருவரான Buzz Aldrin தனது 93 வது பிறந்த நாளில் நீண்ட கால காதலியை நான்காவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் சிறிய அளவில் நடத்தப்பட்ட திருமண விழாவில் 30 வயதுடைய தனது காதலி டாக்டர் ஆன்காஃபாரை திருமணம் செய்து கொண்டதாக சனிக்கிழமையன்று ட்விட்டரில் புகைப்படங்களை வெளியிட்டு பஸ் ஆல்ட்ரின் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

அத்துடன் “எனது 93வது பிறந்தநாளிலும், லிவிங் லெஜண்ட்ஸ் ஆஃப் ஏவியேஷனால் நான் கௌரவிக்கப்படும் நாளிலும், எனது நீண்ட கால காதலரான டாக்டர் ஆன்காஃபாரும் நானும் திருமணம் செய்துகொண்டோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்,இந்நிலையில் பஸ் ஆல்ட்ரின் பதிவுக்கு 22,000க்கும் மேற்பட்ட பயனர்கள் லைக் செய்துள்ளனர், மேலும் இந்த பதிவு 1.8 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் குவித்துள்ளது.

தனது 93 வயதில் 30 வயதுடைய இளம் பெண்ணை பஸ் ஆல்ட்ரின் திருமணம் செய்துள்ள நிலையில், இது இவருக்கு நான்காவது திருமணமாகும். அப்பல்லோ 11 மிஷனின் மூன்று பேர் கொண்ட குழுவில் எஞ்சியிருக்கும் ஒரே உறுப்பினர் பஸ் ஆல்ட்ரின் மட்டுமே,நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் காலடி எடுத்து வைத்த முதல் விண்வெளி வீரர், அவரை பின் தொடர்ந்து 19 நிமிடங்கள் கழித்து பஸ் ஆல்ட்ரின் நிலாவில் கால் பதித்த இரண்டாவது விண்வெளி வீரர் ஆனார்.


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *