60 கிலோ நகைகளை அணிந்து கொண்டு மணப்பெண் வலம்..அனைவரையும் வாயடைக்க வைத்த திருமண தருணம்..!

தங்கத்தின் மீதான மதிப்பும் மோகமும் இன்று உலக மக்களிடையே குறைந்த பாடில்லை பொதுவாக திருமணங்களில் தங்கம் அணிவது கலாச்சாரமானதாகவும், மங்களகரமானதாகவும் இன்றளவும் உலகம் முழுவதும் பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் சீனாவில் மணப்பெண் ஒருவர் அணிந்து வந்த தங்கம் காண்போரை வாயடைக்க வைத்திருக்கிறது மேலும் அவர் திருமணத்தன்று சுமார் 60 கிலோ தங்க நகைகளை அவர் அணிந்து வந்து வருங்கால கணவரை கரம் பிடித்துள்ளார் இதனையடுத்து கணவரின் பிரியத்தை போற்றும் வகையில் திருமணத்தன்று அவர் கொடுத்த அனைத்து நகைகளையும் அணிந்து வந்து அவருக்கே சர்பிரைஸ் கொடுத்துவிட்டார்.

60 கிலோ தங்க நகைகளை போட்டுக்கொண்டு மணப்பெண் நடக்கமுடியாமல் வந்ததது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியிலேயே ஆழ்த்தியது இது குறித்து வெளியாகியுள்ள தகவலின்படி, இருவரும் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது மணமகளுக்கு சீதனமாக சுமார் 60 நெக்லஸ்கள் இரண்டு வளையல்கள் என கொடுத்துள்ளார்.

மேலும் அவற்றை அணிந்துகொண்டு மணமகளால் திருமண சடங்குகளை செய்ய முடியவில்லை இது அங்கிருந்த விருந்தினர்களுக்கு பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது ஒருவர் மணப்பெண்ணிடம் சென்று தான் உதவுவதாக கூறியபோதும் புன்னகைத்த அந்த மணப்பெண் தான் நார்மலாக இருப்பதாகவும், திருமணச் சடங்குகளில் தொடர்வதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.


Posted

in

by

Tags: