9 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட சிறுமி தற்போது மீண்டும் தன் குடும்பத்துடன் இணைந்துள்ளார், 16 வயதில் வீடு திரும்பியுள்ளார், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள அந்தேரி பகுதியைச் சேர்ந்தவர் பூஜா கடந்த 2013ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற ஏழு வயது சிறுமி பூஜா காணாமல் போனார்.
இவரது தாயார் பூனம் கௌட் பூஜா அவரை கடத்தியவர்களால் வேலைக்கு அமர்த்தப்பட்ட இடத்தில் 35 வயதான பிரமிளா தேவேந்திராவும் வேலை செய்து வந்தார் ஒரு நாள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தான் இளமையில் கடத்தப்பட்டதாக பிரமிளாவிடம் சொன்னார், பூஜாவுக்கு உதவ வேண்டும் என்று முடிவு செய்தார் பிரமிளா தேவேந்திரா இவர்கள் என் அம்மா-அப்பா இல்லை என்று முன்பே பூஜா சொல்வாள் இவர்கள்தான் என் பெற்றோர் என்று யூட்யூபில் ஒரு வீடியோவைக் காட்டினாள்.
எனக்கு தெரிந்த பெண் ஒருவரை அந்த இடத்துக்கு அனுப்பி அவளது பெற்றோரின் செல்போன் நம்பர் வாங்க முயற்சி செய்டேன் ஒருவழியாக, ரஃபிக் என்பவருடைய எண்ணுக்கு லைன் கிடைத்தது ரஃபீக் பல வருடங்களாக, பூஜா குடும்பத்தின் பக்கத்து வீட்டுக்காரராக இருந்தவர்.
தனக்கு என்ன நடந்தது என்பதை நம்மிடம் விவரித்தார் பூஜா அன்று எனக்கு ஒருவர் ஐஸ்கிரீம் கொடுத்தார் பின்னர் பேருந்தில் ஏற்றிவிட்டார் நான் அழுதுகொண்டே இருந்தேன் மூன்று நாட்களில் என்னை கோவாவுக்கு அழைத்துச் சென்றனர் பின்னர் ராய்ச்சூர் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் நான் சேர்க்கப்பட்டேன்.
பூஜாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் தற்போது ஹாரி மற்றும் சோனி டிசூஸா என்பவர்கள் மீது மும்பை நகர் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர் தற்போது இருவரும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்,ஆனால் பூஜாவை தாக்கிய சோனி டிசூஸாவை கைதுசெய்யுமாறு பூஜாவின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர் தங்களுக்கு குழந்தை பிறக்கவில்லை என்பதால் பூஜாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கடந்துபோன 9 ஆண்டுகள் திரும்பி வராது ஆனால் பிரமிளாவால் பூஜா மற்றும் அவரது தாயின் வாழ்க்கையை முற்றிலும் மாறியுள்ளது.