அட இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!!! வெள்ளை தாடி 4 நிமிடங்களில் இயற்கையாகவே கருப்பு தாடியாக மாறும்..

தாடி, மீசை போன்றவை ஆண்களின் மிக முக்கிய அடையாளமாக பல ஆயிரம் ஆண்டுகளாகவே உள்ளது. ஆண்களுக்கு தாடியை பிடிக்குதோ இல்லையோ பெண்களுக்கு இதன் மீது தனி மோகம் இருக்க தான் செய்கிறது. நிவின் பாலியை போன்றோ அர்ஜுன் ரெட்டியை போன்றோ ஆண்கள் தாடி மற்றும் மீசை வைத்திருந்தால் பெண்கள் பெரிதும் விரும்புவார்கள்.

இயற்கையாகவே பெண்களுக்கு இதன் மீது ஒரு வித ஈர்ப்பு இருக்கிறது என ஆய்வுகளும் சொல்கின்றன. தாடி மற்றும் மீசை அதிகமாக வளர்வது ஒரு புறம் இருக்க, இதன் கருமை முக்கியமானதாக கவனிக்கப்படுகிறது.

தலை முடி வெள்ளையானால் எப்படி நம்மால் பொறுத்து கொள்ள முடிவதில்லையோ அதே போன்று தான் தாடி மற்றும் மீசையில் வெள்ளை முடி வளர்ந்தாலும் நாம் விரும்புவதில்லை. இப்படி மீசையிலும் தாடியில் வளர கூடிய நரை முடிகளை கருமையாக்க ஒரு சில வழி முறைகள் உள்ளன. இவற்றை நம் வீட்டில் இருக்க கூடிய மூலிகை தன்மை கொண்ட பொருட்களை வைத்தே நம்மால் செய்ய இயலும்.

பல ஆண்களோட விருப்பமான ஒன்று. பெண்களுக்கும் அழகான அடர்த்தியான கருமையான தாடி வைத்திருக்கும் ஆண்கள் மீது தனி பிரியமும் ஈர்ப்பும் இருக்கத்தான் செய்யும். ஆனால் இந்த அழகிய ஆசைகளை உங்கள் தாடியில் உள்ள நரைமுடிகள் கெடுத்துவிடுகிறதா..? மேலும் கருமையான தாடி இல்லை என வருந்துகிறீர்களா..? கவலையை விட்டுத்தள்ளுங்கள். உங்கள் நரைகள் கொண்ட தாடியை கருமையாக மாற்ற வழிகள் இதோ இருக்கிறது.